|
| கன்னத்தில் கைவத்தபடி பூனையொன்றைப் பார்த்தபடி அமர்ந்திருந்த அந்தக் குழந்தை அழகாயிருந்தது.
‘புதுசா குடிவந்திருக்காங்க..’ என்றாள் மனைவி ‘அந்தக் குழந்தை பேரு கூட...’ யோசிக்க ஆரம்பித்தவளிடம் சொன்னேன்..
“பேரு வேண்டாம்.. குழந்தைன்னே இருக்கட்டும்..”
******************
என் கவலைகளைப் பகிர்ந்து கொள்வதில் எனக்கெந்தத் தயக்கமும் இல்லை. உங்கள் கவலைகளையும் பகிர்ந்து கொள்ளுங்களேன் என இறைஞ்சப் போவதுமில்லை. ‘என் கவலைகள் எனக்கு உங்களது உங்களுக்கு’ என்ற வாசகமேதும் சொல்லப்போவதுமில்லை. என் கவலைகள் குறையும்போது அதையும் உங்களிடம் பகிர்ந்துகொள்வதில் எனக்கு சந்தோஷம்தான்.
ஆனால் உங்கள் கவலைகளை நீங்கள் பிறரிடம் பகிர்ந்து கொள்வதைவிட என் கவலைகளை பிறரிடம் பகிர்ந்து கொள்கிறீர்கள் என்பதில்தான் நமக்குள் வேறுபாடுகள் ஆரம்பிக்கிறது.
******************
‘எனக்கு நிகழ்ந்த எல்லாமும் உங்களுக்கும் நிகழ்ந்திருக்கக்கூடும்’ என்ற வரிகளில் ஆரம்பித்த என் அடுத்த கவிதையை எப்படித் தொடர்வதென்ற யோசனையில் இருக்கிறேன் நான். எனினும் அந்த அடுத்த வரி எனக்குத் தோன்றும்போது நீங்கள் உங்கள் வழக்கமான வேலைகளுக்குத் திரும்பியிருக்கக்கூடும். நானும்...
PS: This is not mine
|
|
|
|
|
|
Love Cricket? Check out live scores, photos, video highlights and more.
Click here.
No comments:
Post a Comment